search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத் பல்கலைக்கழகம்"

    ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அபார வெற்றி பெற்றுள்ளனர். #HUSUElection #ABVP
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி., என அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போட்டியிட்டனர்.


     
    தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பின் ஆர்த்தி நாக்பால் 1669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இதேபோல், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பினர் வெற்றி பெற்றனர்.

    எட்டு ஆணடுகளுக்கு பிறகு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது என ஏ.பி.வி.பி. அமைப்பினர் தெரிவித்துள்ளனர் என்பது 
    குறிப்பிடத்தக்கது. #HUSUElection #ABVP
    ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.#Rahulgandhi #Congress

    ஐதராபாத்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் தெலுங்கானாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி மாணவ- மாணவிகளை நேரில் சந்தித்து உரையாட திட்டமிட்டு உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய மாணவ பிரதிநிதிகளை அவர் சந்திக்க உள்ளார். இதற்கான அனுமதியை மாணவர்கள் தரப்பில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.

    ஆனால் உஸ்மானியா பல்கலைக்கழகம் ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்து உரையாட அனுமதி மறுத்து விட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த அனுமதியை பல்கலைக் கழகம் மறுத்து உள்ளது.

    இதுகுறித்து உஸ்மானியா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமசந்திரன் கூறியதாவது:-

    இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாணவர் அமைப்பினர் உள்ளனர். ஒரு அமைப்பினர் ராகுல் காந்தியை சந்திக்க ஆர்வத்துடன் உள்ளார். ஆனால் மற்ற மாணவ அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை நிலை நாட்டுவதுதான் எங்களது விருப்பம். ராகுல் காந்தி இசட் பாதுகாப்பில் உள்ளார். அவரை போன்ற தலைவருக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுலை சந்திக்க அனுமதி மறுகப்பட்டதால் மாணவ பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஆளும் கட்சியின் நெருக்கடி காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக மாணவர் அமைப்பினர் இன்று கோர்ட்டை நாடவும் முடிவு செய்து உள்ளனர்.

    சைபர் பாதுகாப்பு எனும் புதிய பாடதிட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் இன்று அறிமுகம் செய்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    ஐதராபாத் :

    ஐதராபாத் பல்கலைக்கழகம் தகவல் பாதுகாப்புடன் கூடிய ”சைபர் பாதுகாப்பு” எனும் முதுகலை பாடத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. 

    தற்போதைய 2018-19 கல்வியாண்டு முதல், இரண்டு வருடத்திற்கான சைபர் பாதுகாப்பு பாடத்திட்டதின் முழுநேர பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 2018, 2017, 2016-ஆம் ஆண்டு கேட்(GATE) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க முடியும். இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் ஒவ்வொருவருக்கும் எ.ஐ.சி.டி.ஈ-கேட்(AICTE-GATE) சான்றிதழ் வழங்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி முதல்  ஜூன் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும், மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. #UniversityofHyderabad #CyberSecurity
    ×